Showing posts with label மழை. Show all posts

Thursday, November 25, 2010

தண்ணீர் தவளைகள்:

தரையிலும்,தண்ணீரிலும் தவளைகள் மட்டுமா வாழும்?! இல்லை நாங்களும் வாழ்வோம் என்கிறார்கள் சென்னைவாசிகள்.

சாலைகள் எங்கே எனத்தேடும் வாகன ஓட்டிகள், விடுமுறையை எதிர்பார்த்து மகிழ்ச்சியடையும் பள்ளி சிறுவர்கள் , மழையை திட்டும் வியாபாரிகள், கழுவிவிடப்பட்ட கட்டிடங்கள்,பிரகாசிக்கும்  காக்கைகள் என பலகாட்சிகளின் பின்னலாக சிரிக்கிறது சென்னை மாநகரம்.

வாகனங்களின் இரைச்சலாலும்,புகையாலும் எப்பொழுதுமே கோபமாய் இருக்கும் மாநகரத்தின் கோபம் மழையின் காரணமாக சற்று தணிந்திருக்கிறது.

"இந்த ஊர்ல மட்டும்,மழை வந்தாலும் தொல்லை,வெயில் வந்தாலும் தொல்லை" என கூறுபவர்களே இங்கு அதிகம்.
சரியான வடிகால் வசதி இல்லாமை,ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் சாலையிலும்,வீடுகளிலும் தண்ணீர் புகுந்து விடுவதாக கூறும் பொதுமக்கள்,எதுவாக இருந்தாலும் சமாளித்துக்கொள்ள பழகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

பெருமளவு தொழிற்சாலைகள்,உணவகங்கள்,கேளிக்கை விடுதிகள் என நிறைந்து கட்டிடக்காடாக இருப்பதால்,எப்பொழுதுமே வெயில்,மழை என எது வந்தாலும் மல்லுக்கு நிற்கிறது இந்த மாநகரம்.

சில சமயம்  அதிகமாக பெய்து  ஓட்டை சாலை, நிரம்பி வழியும் சாக்கடை , சுகாதார கேடு  என ஆட்சியாளர்களின் சாயத்தை வெளுக்க வைத்து விடுகிறது மழை .
 
திரையில் வரும் கதாநாயகர்கள் மட்டுமே மழையை சந்தோசமாக அனுபவிக்கிறார்கள் எனவும், நிஜத்தில் மழையால் மகிழ்ச்சியடைந்தாலும் பெருமளவு அதனால்  பாதிப்பே அதிகம் அடைவாதாக கவலைப்படுகின்றனர் மற்றுமொரு சாரர்.

பணக்காரனுக்கு வெயிலு அடிச்சா ஏ.சி. மழை பேஞ்சா காரு நாங்கதான் ஓட்டைவீடு, தினக்கூலி, கூட்ட நெரிசல் என அல்லோல்படுவதாகவும் அலுத்துக்கொன்டனர் விளிம்பு நிலை மக்கள்.
எது எதுவாக இருப்பினும்,இவையெல்லாம் நமக்கு நாமே வைத்துக்கொண்டவை,இதில் மழையையோ வெயிலையோ குறை சொல்வது அறிவீணமாகும் என் தனது அனுபவத்தை பகன்றார் புத்தகக் கடை ஊழியர் ஒருவர்.

மழை குறித்து மரங்களிடமோ,பறவைகளிடமோ கேட்க முடியாவிட்டாலும்,அவை இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியாகவே வானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன. அது ஏதோ ஒன்றை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

Wednesday, November 24, 2010

நேற்று பெய்த மழை

சென்னை,மழைக்கு மக்கள் நடுங்கும் பூமி.மழையானாலும் சரி வெயிலானாலும் சரி,"வெயில் சற்று அதிகம்,மழை சற்று குறைவு" என்பது போய்,என்ன மழையிது இப்படி பெய்து கெடுக்கிறது என்பதே தற்சமயம் சாலையோர சிறு வியாபாரிகளின் பரவலான குரலாக உள்ளது.

காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரபரப்பாக ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வெளிவரும் மக்கள் தங்கள் கலடிகளை அவ்வளவு பத்திரமாக பார்த்துப் பார்த்துப் பதித்தனர்.

செய்வதற்கு வேலை இருக்கிறது,செல்வதற்குத்தான் வழியில்லை என்பதாய் வானிலை ஆய்வாளர் ரமணன் சொல்லியும் குடை கொண்டு வராமல் மழையக்கண்டு ஒடுங்கி நின்றது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓர் கூட்டம்.

சேர்,சகதி என்பது போய் பள்ளமெது,மேடெது எனத் தெரியாவண்ணம் மழைநீர் சாலையை சமமாய் காட்டுவதாய் பயந்தனர் வாகன ஓட்டிகள்.சாதாரன மழைக்கு சாலைகள் அறுபடுவது சாதாரனம் என்று சர்வசாதாரனமாக சொல்லிவிட்டு, முட்டிக்குமேல் துணியை தூக்கிக்கொண்டு கரைகண்ட கூவக்கிளைகளை தத்தம் வண்டிகளை கொண்டு கடக்கின்ற மக்கள் கூட்டம்.

இத்தனையும் தாண்டி,பயன்படுத்தியே ஆக வேண்டிய சுரங்கப்பாதையை பயன்படுத்தவே முடியாத நிலை,சுரங்கப்பாதை வாய்க்காலாக மாற்றப்பட்டதா என்ற சந்தேகம் வேறு.5 அடி அகல நடைபாதையில் 4 அடிக்கு கடைகள் மீதம் 1 அடியில் இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் தடுமாற்றத்தோடு சாரையாய் செல்லும் மக்கள் என சென்னை அழகாய்த்தான் உள்ளது.

இல்லை இதெப்படி அழகாகும்? எல்லோரையும் போல் இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.மழைக்குப்பின் மண்வாசம் ஆனால் இங்கோ முன்னும் பின்னும் தார் வாசமும்,கான்க்கிரீட் வாசமும்,எந்திர மனிதனின் சுவாசமும் தான்.

மக்களுக்கு இந்த மழை பல வகைகளில் இன்னலாக இருந்தாலும்,இன்னும் வெட்டப்படாத மரங்களுக்கு இது ஆதாரமாக அமந்துள்ளதே முக்கியமானது.குடிக்ககவும்,கழுவவுமே கஷ்டப்படும் இம்மக்கள் எங்கிருந்து மரம் வளர்ப்பது, குறைந்த பட்சம் வெட்டாமலிருப்பதே அதிசயம்.எது எப்படியிருப்பினும் இங்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போல் சென்னை பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.

வெயிலுக்காகவே மழையை விரும்புகின்றனர்.பனிக்காகவே வெயிலை ரசிக்கின்றனர்.இங்கு இன்னும் பல சேரிப்பகுதி கூரைகளின் சருகில் சொட்டும் மழைநீரை அவர்களையன்றி யாராலும் ரசிக்கமுடியாது.அவர்களையன்றி யாராலும் மழையில் சுதந்திரமாக நனைய முடியாது.முடிந்தால் முயன்று பாருங்கள்.....

- பாஇரா.