Monday, November 29, 2010

mahabalipuram






உளி இசைக்கும் பாறைகளும்

விழி ரசிக்கும் சிற்பங்களும்


காணும் திசையாவும் சிற்பங்கள் நிறைந்திருகும், சிற்ப நகரமான மகாபலிபுரம், ஏழாம் நூற்றாண்டில் பல்லநாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். மகாபலிபுரம் எனும் பழையத் துறைமுகத்தை 7-ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன்
உருவாக்கினான். என்றாலும், முதலாம் நரசிம்மவர்ம மாமல்லன் நினைவாக இக்கடற்கரை நகரம் மாமல்லபுரம் என்றழைக்கப்பட்டது. இதுவே இப்போது மருவி மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கே கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலுமிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கரையில் ஒரே ஒரு கற்கோயில்தான் இருக்கிறது. பல்லவர்க
ளில் மகேந்திர பல்லவனே முதன் முதலாகக் குடை வரைக் கோயில்களைத் தோற்றுவித்தான். செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் ஒரு குன்றினைக் குடைந்து கோயிலாக மாற்றியதோடு அங்கு ஒரு கல்வெட்டும் பொறித்தான். அதில் 'இந்தக்கோயிலை நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றி விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளான். இவனே மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் குடை வரைக் கோயில்களை அமைத்துக் கட்டடக் கலைக்குப் புத்துயிர் அளித்ததோடு, அழகான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளான். இவனுக்குப் பின் வந்த இவன்மகன் நரசிம்மவர்மன் தன் தந்தையின் பணியைத் தொடர்ந்தான். திருக்கழுக்குன்றத்திலுள்ள ஒரு குடை
வரைக் கோயில் இவன் காலத்துப் படைப்புக்குச் சிறந்த சான்றாகும். பின்வந்த இராஜசிம்ம பல்லவன் காலத்தில்தான் பல்லவர்காலக் கோயிற்கலை சிகரத்தைத் தொட்டது. காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் குடைவரை படைப்புகளான ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை போன்ற படைப்புகள் அனைத்தும் இவனது பணியாகும்.

மகாபலிபுரத்தை காண வருபவர்கள் முதல்முதல் பார்ப்பவை ஒரு பெ

ரும்பாறையும்,

அதில் வடிக்கப்பட்டுள்ள அமரச் சிற்பங்களுமே இந்தச் சிற்பத்தை அர்ஜுனன் தவம் என்கிறார்கள்.

தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை முதலியவர்களையும், யானை, சிங்கம்,

சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் இவற்றையும்உயிர்ச்சிற்பங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள். இந்தப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கிறது. இது இரண்டு பாகமாகப்

பாறை

யைப் பிரிக்கிறது.

வடக்கு பாகத்தில் சிவப்பிரானையும், தவக்கோலத்தில நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும், கீழே சிறு விஷ்ணுகோயில் ஒன்று இருப்பதையும் காணலாம். இடது பாகத்தில் உயிருள்ளவை போலவே தேவர்களும் தேவியரும் சிலையுருவில் பொறிக்கப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். பசு தன் கன்றை நக்கிக் கொடுப்பது தத்ரூபமாய் இருக்கிறது. குட்டியுடன் இருக்கும் பெண்குரங்குக்கு ஆண்குரங்கு பேன் எடுக்கும் சிலை அமைப்பு கண்ணைக் கவர்கிறது. குன்றின் மேல் ஏறும் போது ஒரே பாறையில் இரண்டு அடுக்குகளுடன், மேலே ஒன்பது கலசங்களுடன் செதுக்கப்ட்ட கணேசரதம் காணப்படுகிறது. குன்றின் வடகோடியில் யானை, மான், குரங்கு,

யில் முதலிய சிற்பங்களைக் காணலாம்.

இயற்கையான பாறையைச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர் போல காட்சியளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த
சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.இராமானுஜ மண்டபம் இருக்கிறது. ஆனால் இது இராமானுஜரின் காலத்துக்கு நானுறு ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. இதில் உள்ளத் தூண்களை நிமிர்ந்து அமர்ந்த சிங்க உருவங்கள் தாங்குகின்றன. இதையடுத்து
குன்றின்மேல் ஏறிப்போனால் இடிந்த கோபுரம் போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. இது முன்பு கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இது ஓலக்கணீசர் என்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில். இதையடுத்து முற்றுபெறாத ராயகோபுரம் ஒன்று இருக்கிறது. இனி கீழிறங்கி நடந்தால் குன்றுக்குத் தெற்கே பாண்டவரதங்கள் எனப்படும் ஐந்து ரதங்கள் உள்ள இடத்துக்குப் போய்ச்சேரலாம். இவற்றை நெருங்கும் போதே சீறி நிற்பது போன்ற கல்
சிங்கம் ஒன்றும், அதன் பின்னால் கம்பீரமான யானை ஒன்றும் காண்போர் கண்ணைக் கவரும். இந்த ஐந்து ரதக் கோயில்களும் ஒரே பாறையில் செதுக்கியவை. குடிசைபோல் அமைந்திருக்கும் சிறிய கோயில் திரெளபதி ரதமாகும். இதன் அடிப்புற மேடையைச் சிங்கங்களும் யானைகளும் தாங்குவது போல் செதுக்கப்ட்டிருக்கிறது. கர்ப்பக்கிருகத்தின்
உள்பகுதியில் துர்க்கை உருவம் பின் சுவரிலே புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதை காணலாம். தாமரை மலரின் மேல் நிற்கும் கோலம்; தலையில் கரண்ட மகுடம்; கா
லடியில் இரண்டு மனிதர்கள மண்டியிட்டிருக்கிறார்கள் ஒருவன் தலையை அறுத்திடும் காட்சி; வெளிப்புறம் இரண்டு துவாரபாலிகைகள் வில் பிடித்து நிற்கிறார்கள். துர்க்கையினுடைய இந்த விமானத்தின் முன்னால் சிங்க உருவம் நிற்கும் விதமாய் செதுக்கப்பட்டுள்ளது. உயரமான விமானமும் அருகிலே சிறிய விமானமும் இரண்டு கோயில்களுக்கு ஏற்பட்டவை. கடலை நோக்கியுள்ள கோயிலில் பெரிய லிங்கம் ஒன்றும், சோமாஸ்கந்தர் உருவமும் இக்கோயில் சிவபெருமானுக்காக அமைத்தது என்பதைக் காட்டும். இந்தக் கோயில்களின் முன்பக்கமும் பின்பக்கமும் பெரிய பிரகாரங்கள் இருந்தன. கிழக்கே இருந்ததைக் கடல் கொண்டுவிட்டது.



மேற்கே இருந்த பிரகாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மணல் மேடாக இருந்தது. மணலைத் தோண்டி மறைந்திருந்த சிற்பங்களைக் கண்டெடுத்து பல இடங்களில் வைத்து, ரிஷபங்களை வரிசையாக அமைத்து அழகு படுத்தியிருக்கிறார்கள், அரசாங்கத்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை குடைவரைக் கோயில் எடுக்கும் மரபினைத் தோற்றுவித்தவர்கள் பல்லவர், பாண்டியர், அதியர் மரபுகளைச் சேர்ந்த மன்னர்களே ஆவர். அவர்களை ஒப்பிடும்போது பல்லவர்களின் படைப்புகளே தமிழகத்தில் அதிகம் காணப்படுகின்றன. குடை வரைக்கோயில்கள் மட்டுமன்றி, கட்டுமானக் கோயில்களும் பலவற்றை எடுப்பித்து, அங்குச் சிற்பம், ஓவியம், நாட்டியம், இசை, அணிகலன்கள் உருவாக்குவது போன்ற பல்வேறு கவின்கலைகளையும் வளர்த்தனர். இவ்வாறாக தன் சந்ததிகளுக்கு சொல்ல நினைத்ததை சிற்பமாக செதுக்கிவைத்தான். ஆனால் நம்மவர்கள் அடுத்த தலைமுறைக்கு எதோ சொல்வதாக நினைத்துக் கொண்டு சிற்பங்கள் மீது கரியால் எழுதுவது, சிற்பங்களின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுப்பது, சேதபடுதுவது என்று நம்முடைய பாரம்பரிய சின்னங்களை நாமே அழிக்க, காரணமாக இருந்து வருகிறோம். இயற்கையாகவே உப்பு காற்றால் சிற்பங்கள் சிதைத்தும் வருகின்றன. இத்தகைய வரலாற்று சின்னங்களை பேணி பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.