நடைபெறவிருக்கும் மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் விழாவில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மின்னனு ஊடகத்துறை மாணவர்கள் முற்றம் கலைக்குழு சார்பில் வீதி நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- பற்குணன்
சென்னை
04.12.2010
![]() |
(புகைப்படங்கள்: செந்தில் குட்டி) |
நிகழ்ச்சி குறித்த ஒருங்கமைப்பு மற்றும் அறிமுகக் கூட்டம் நேற்று(03.12.2010) இதழியல் மற்றும் தொடர்பியல் துறை கட்டிடத்தில் நடைபெற்றது.இதுதொடர்பாக மைலாப்பூர் டைம்ஸ்ன் எடிட்டரான வின்சென்ட் மேக்ஸ் அவர்கள் விழாவைப் பற்றியயும் அது நடைபெறும் களத்தைப் பற்றியும் கூறினார்.திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் 9 வரையிலான இந்த விழாவில் வீதி நாடகம்,கோலப் போட்டி,மேடை நிகழ்ச்சிகள்,பரத நாட்டியம்,இசைக் கச்சேரி, என இன்னும் பல களிப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனக்கூறிய அவர் பழம் பெறுமை வாய்ந்த கட்டிடங்களையும்,இடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கருப்பொருளோடு நமது வீதி நாடகத்தினை அமைத்திடுமாறு கேட்டுக்கொண்டார்.
நமது மூத்த மாணவர்களின் திறமையை பாரட்டிய அவர்,அவர்களின் முந்தைய நாடகங்களையும் விட இதனை சிறப்பாக நிகழ்த்திட வாழ்த்தினார்.
"பழம்பெறுமை வாய்ந்த இப்பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை அமந்துள்ள இக்கட்டிடத்திற்கு இதுபோன்று நீலம், பச்சை, மஞ்சள்,இளஞ்சிவப்பு என மனம் போனபோக்கில் வண்ணம் தீட்டியிருக்காமல் அதன் தனித்தன்மையையும்,பழமையையும் பாதுகாக்கும் வண்ணம் கட்டிடத்தை புதுப்பித்திருக்க வேண்டும்"என்று இதழியல் துறை அறைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கும் விதத்தை விமர்சித்தவர் அதனை கண்டிக்கவும் செய்தார்.உண்மைதான் இது போன்ற பழம் பெறும் கட்டிடங்களை புதுப்பிப்பதற்கான முறையில் கவணமாக இருக்க வேண்டும்.இதில் துணை வேந்தர்க்கும் முழுபொறுப்புள்ளது."வெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்காமல் இதுபோன்ற பராமறிப்பு பணிகளிலும் கவணம் கொள்ளவேண்டும், தொல்லியல் துறை மாணவர்களுக்கு இது தெரியவந்தால் எவ்வளவு வருத்தப்படுவர்" எனப் பல மாணவர்கள் வருந்துகின்றனர்."இது தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமே காரணமல்ல தொடர்ச்சியான புதுப்பித்தல் முறையே இப்போதும் கையாளப்பட்டிருக்கிறது. கொஞ்சம் செலவானாலும் சரியென்று சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என நாசுக்காக எடுத்துக்கூறினார் இதழியல் மாணவர்கள் இருந்த அந்த சபையில்....
முற்றம் குழுவைப்பொறுத்த வரை மூத்த மாணவர், இளைய மாணவர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லையென முன்னதாக பேசிய துறைத்தலைவர் பேராசிரியர் இரவீந்திரன் அவர்கள் மாணவர்களிடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பேசினார். பல்கலைக்கழக வளாகத்தில் ஆதிக்கத்தைப் பெற்றுள்ள முற்றம் கலைக்குழு, வளாகத்தின் வெளியிலும் தனது திறனை நிரூபித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த மைலாப்பூர் விழாவில் அதன் கால்களை அழுத்திப்பதிக்க கடுமையாக உழைக்கவேண்டும் என்று மாணவர்களிடத்தில் புத்துணர்ச்சியை உண்டாக்கும் வகையில் பேசினார். அதை வழிமொழிந்தும்,மாணவர்களின் முந்தைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தியும் பேசினார் விரிவுரையாளர் பியூலா ரேச்சல் ராஜரத்தினமணி.
![]() |
கோவிலின் அமைவு மாதிரியை வரைந்தும் முற்றம் குழு எங்கு நிகழ்ச்சி நடத்தப்போகிறது என்றும் மீண்டும் தெளிவுபடுத்தினார் வின்சென்ட் மேக்ஸ் அவர்கள்.மக்களுக்கு இடஞ்சல் இல்லாமலும்,மக்களை கவரும் வகையில் எவ்வாறு நாடகத்தினை நடத்த வேண்டும் என்ற ஆலோசனைகளையும்,வாழ்த்துகளையும் கூறினார்.கூட்டம் முடிந்ததும் மாணவர்களிடையே பரவலாக ஆர்வமும்,அரசல்புரசலான ஆலோசனைகளும் நடந்தது.இருந்தபோதிலும் திங்கள் முதலே இதுசம்மந்தமான ஆலோசனைகளும்,பயிற்சிகளும் முறைப்படி தொடங்கும் என முற்றம் கலைக்குழுவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் துறையின் மூத்த மாணவருமான ஹரிஷ் மாணவர்களிடையே அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டார். நடக்கவிருக்கும் நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.