Showing posts with label மதச்சார்பின்மையும். Show all posts
Showing posts with label மதச்சார்பின்மையும். Show all posts

Monday, November 29, 2010

public event


அயோத்தி தீர்ப்பும், மதச்சார்பின்மையும்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், 25.11.2010 அன்று மாலை 6 மணிக்கு, பி.டி.தியாகராயர் அரங்கம், ஜி.என்.சாலை, தியாகராயர் நகர், சென்னையில் அயோத்தி தீர்ப்பும், மதச்சார்பின்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தபட்டது. இதில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் (தலைவர் த.மு.மு.க.),தலைமை உரையாற்றினார். ஜனாப். J.சீனி முஹம்மது வரவேற்புரை உரையாற்றினார். தோழர் ஆர் நல்லகண்ணு(சி.பி.ஐ.), திரு.கோ.முத்துக்கிருஷ்ணன் (மூத்த வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றம்), அருட்திரு சேவியர் அருள்ராஜ் (கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம்), திரு. பாரதி கிருஷ்ணகுமார் (இயக்குனர் – எழுத்தாளர்), புதுவை கோ.சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு) ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஜனாப். முஹம்மது அபூபக்கர். நன்றியுரை வழங்கினர்.தலைமை உரையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் (தலைவர் த.மு.மு.க.) அயோத்தி பிரச்சனை என்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நடக்கும் பிரச்சனை இல்லை.இந்து, முஸ்லிம் சகோதரத்துவத்தைக் கெடுக்கும் சில தீய சக்திகளின் சதி என்றார் .


மதவெறிக்கு இடமில்லை: திரு.ஆர்.நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ’அயோத்தி தீர்ப்பும், மதச்சார்பின்மையும்’ என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர், ‘’இந்தியா விடுதலை பெற்ற பிறகு, 1952-ல் முதல் தேர்தல் நடைபெற்றது. இப்போது பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ளன.உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து மிகப்பெரிய மாநிலமான பீகாரில் நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் 20-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்த இடதுசாரிகள் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.இந்த வெற்றியை பலரும் பல விதமாக பார்க்கிறார்கள். சிலர் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்கிறார்கள். சிலர் மதம், ஜாதியைக் கடந்து நிதிஷ்குமார் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரக்கூடாது என்று தடுத்ததால் அவருக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. அதாவது மதவெறிக்கு இடமில்லை என்பதை அந்த மாநில மக்கள் நிரூபித்துள்ளனர். மோடி பிரசாரம் செய்திருந்தால் வெற்றி கிடைத்திருக்காது’’என்று தெரிவித்தார்.


திரு.கோ.முத்துக்கிருஷ்ணன் (மூத்த வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றம்) நெற்றியில் பட்டை, குங்கும பொட்டுடன் ஆதரங்களோடு, வந்து நீதி மன்றத்தில் வாதாடுவது போல் வாதாடினார். அரங்கமே கலகலப்பானது.


கோ.சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு) அவர்கள் அயோத்திக்கு நேரில் சென்று, அங்குள்ள நிலைமையை ஆராய்ந்ததன் அடிபடையில் கருத்துகளை பகிர்ந்து கொண்டார் .

ஜனாப். முஹம்மது அபூபக்கர். நன்றியுரை வழங்கினர். கருதரங்கம் ஒன்பது மணியளவில் இனிதே நிறைவடைந்தது.