Sunday, October 16, 2011


சாரல் நகரமும், அதன் பழமைகளும்
இமயமலையில் உருவாகி, கரைபுரண்டு ஓடும் கங்கை நதியின் கரையில் அமைந்த புனிதநகரம் தான் காசி. இந்த காசி நகரம் தென்னிந்தியர்களை பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே சென்று, வரும் தூரத்தில் அமைந்திருந்தது. ஏழை மக்களும் இந்த ஆன்மிக பயன் அடைய, இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சிற்றரின் கரையில் அமைந்திருக்கும் நகரம் தான் தென்காசி. பண்டைய காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது.
“பரக்கிரம பாண்டியன்” என்ற பாண்டிய மன்னன் வடக்கே காசி சென்று திரும்பினான். அவனுடைய கனவில் சிவபெருமான் தோன்றினார். இதன் விளைவாக இங்கு 1440 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கட்ட தொடங்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு கட்டி முடி’கப்பட்டது, வானளாவிய கோபுரமும் எழுப்பப்பட்டது . இக்கோவிக்கு வந்து சிவனை தரிசனம் செய்தால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் விளைவாகவே இவ்வூரின் பெயர் தென்காசி ஆனது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மும்மலைகளான “திரிகூட மலைகள்” சங்கமிக்கும் இடத்தின் அடிவாரத்தில்,சுத்தமான தென்றல் காற்றோடு,மழை தூரல் சாரலாக பொழியும் நகரம் தான் தென்காசி நகரம். இம்மலையில் பழைய குற்றாலம்,குற்றாலம், சிற்றருவி, செண்பாகதேவி,தேன் அருவி, புலி அருவி என அருவிகள் பல உள்ளன. இம்மலையில் பல மூலிகைகள் உள்ளதால்,அருவிகள் மூலிகை வாசத்தோடே கொட்டுகிறது. இந்நகரம் பல பண்டைய பெருமைகளை உள்ளடக்கிய நகரம்.முன்னோர்கள் தன் சந்ததியோடு தொடர்ப்பு கொள்ளும் வகையில் சிற்பங்கள், கோவில்கள்,என சான்றுகள் நிறைய உள்ளன.
சிதம்பரேஸ்வரர் கோவில் சிற்பங்களும், ஓவியங்களும் மிகவும் பழமையானவை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் அழிக்கபட்டுவிட்டன. இங்கு இருக்கும் கிணற்றில் குகைகள் உள்ளன. குகைகள் தூர்ந்து போனாதால் இந்த வழிகள் எங்கு சென்று முடிகின்றன என்பதுகேள்வி எழப்புவதாகவே உள்ளன. இவ்வாறாக வராலாற்றில் என்ன நடந்தது என்பது கண்டறிய முடியாமலே விடுகதையாகவே மிஞ்சி நிற்கிறது சிதைந்த சில சான்றுகள்.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இது 1824-ல் தீ விபத்தால் சிதைந்து போனது. கோபுரங்கள் 1826 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை இடிந்த நிலையிலேயே இருந்தது. பின் 1996 ஆம் ஆண்டு திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களால் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று கம்பிரமாக காட்சியளிக்கிறது. இக்கோவில் எவ்வளவு பழமையோ, அதுபோல் இக்கோவின் பாதத்தில் அமைந்திருக்கும் கடைகளும் மிகவும் பழமையானவை, பாரம்பரியம் மிக்கவை. அவைகளுள் முக்கியமான கடையாக நூற்றாண்டுகளை கடந்து இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்து தன்னுடைய நற்பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஸ்ரீ கிருஷ்ணா விலாஸ் பெரிய லாலா கடை. இக்கடை இனிப்பு மற்றும் கார வகைகளை தரம் குறையாமல் இன்றும் கொடுத்து வருகிறது.
1904ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடையின் உரிமையாளர்கள் திரு.கிருஷ்ணசிங், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர்கள், உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ராஜஸ்தானில் இருந்து சொக்கம்பட்டி ஜமீனால் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். காலபோக்கில் பலகாரஙகள் செய்து விற்க துவங்கினர். அவர்கள் கோதுமையில் செய்த அல்வா இங்குள்ள மக்களுக்கு புதுமையாகவும், வித்தியாசமான இனிப்பு வகையாகவும், சுவையாகவும் இருந்த காரணத்தினால் இதுவே அவர்களின் நிரந்தரமான தொழிலாக மாறியது. இப்போது தென்காசி பெரிய லாலா கடையை திரு.கிருஷ்ணரான சிங் அவர்களின் மகன்களான திரு.சுப்பு சிங், திரு.மோகன் சிங் நடத்தி வருகின்றனர்.இப்பரம்பரையின் வாரிசான திரு.திலிப் சிங். கூறும் போது “அல்வா சுவையாக இருப்பதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் சிற்றரின் தண்ணீரே காரணம்” என்கிறார்.
சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகின்றன. மகாலிங்க மலையும் மிகவும் பழமையானது. இங்கு உள்ள மூலிகைகளும், குகையும் வியப்பூட்டுவனாவாக உள்ளன. சித்திரசபையை கொண்டுள்ள நகரம். வீரத்திற்கும் பங்சமில்லை என்பதற்கு தென்காசியின் அருகில் உள்ள செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன் தன் உயிரை கொடுத்து விடுதலைக்கு வித்திட்டார் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு பல பழமைகளை கொண்டுள்ள இந்நகரம் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மற்றும் மலையாளிகள் ஒற்றுமையோடும், நட்புணர்வோடும் இருந்த சுற்றுலா தளமான தென்காசியில் தற்சமயம் சில மத பிரச்சனையை சந்தித்து வருவது வருந்ததக்க போக்ககாக உள்ளது

Sunday, July 24, 2011

மாஸ்கான் சாவடி வளர்ப்பு பிராணிகளின் சந்தைநம்மில் பலருக்கு நாய், முயல், பூனை, புறா பறவை என வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். சிலர் புலிக்குட்டிகளையும், யானைக் குட்டிகளையும், பாம்புகளையும் செல்லமாக வளர்த்து வருவதை கேள்விப் பட்டிருக்ருப்போம். நான் கடற்கரை தோட்டத்தில் வருடக் கணக்கில் ஒரு ஆமையை வளர்த்து வந்தேன். எஸ். முகம்மது ரஃபி அந்தக் கதையை பிறகு சொல்லுறேன். இப்போது மேற்கொண்டு படியுங்கள்.

சிலர் தங்களது ராசிக்காகவும், கௌரவத்திற்காகவும் வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். மனதிற்கு மகிழ்ச்சியையும் பொழுது போக்குக்கு உற்ற துணையாக இருக்கின்ற செல்லப் பிராணிகளுக்கென்றே ஒரு சந்தை கூடுகிறது. அதுவும் நம்ம சென்னையில்....

சென்னை மண்ணடிப் பகுதியில் அமைந்துள்ளது. ‘‘மாஸ்கான் சாவடி’’ இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணியிலிருந்தே சந்தை கூட தொடங்குகிறது. விதவிதமான குருவிகளையும், புறாக்களையும் கொண்டு வருகின்றனர். சிலர் தத்தமது வீடுகளில் வளர்க்கும் நாய், முயல், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள கூண்டுப் பெட்டிகள், வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான உணவு வகைகள் என எல்லாம் ஒரு சேர கிடைப்பதும், விலையும் மலிவாக இருப்பதுமே இங்கு கூட்டம் அதிகமாக வர காரணம் என்கிறார் இப்பகுதிவாசி ஒருவர்.
புறாக்கள் மூலம் தூதுவிட்டது அந்த காலம். இப்போ புறா பந்ததயம் தான் பிரபலம் என்கிறார் கண்ணன். பல நிறங்களிலான   புறாக்கள் தான் பிரபலம் என்கிறார் கண்ணன். பல நிறங்களிலான புறாக்கள் வளர்க்கும் இவர், பந்தயத்திற்கு பயன்படுத்துகிற வகையில் புறாக்களை பழக்கி வருகிறார். நான் 12 வயசிலேயிருந்தே புறா வளர்த்து வர்றேன். என்னோட புறா பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கு. முதல்ல, வீட்டுல புறா வளர்க்க சம்மதிக்கல, நான் பிடிவாதமாக இருந்ததால பிறகு வழி இல்லாம ஓ.கே சொல்லிட்டாங்க. இப்போ புறா மட்டுமல்ல, சேவலும் வளர்க்கிறேன். நல்ல ரேட் கிடைத்தால் கையில் இருக்கிறதை வித்துட்டு, வேற அயிட்டங்களா வாங்கி வளர்ப்பேன்.

நீண்ட தெருப்பகுதியில், வழி நெடுகிலும் வளர்ப்பு பிராணிகளை கூண்டிகளில் அடைத்தும், கைகளில் தூக்கி காட்டிய படியும், வாடிக்கையாளர்களை கூவி கூவி அழைக்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் பெண்கள் என செல்லப் பிராணிகளை விற்பனை செய்பவர்கள் தங்களின் பகுதி நேர தொழிலாகவே இதை பார்க்கின்றனர்.
வார வாரம் சந்தையில் ஆஸ்திரேலியா லவ் பேர்ட்ஸ், ஜப்பான் காடை, மைனா, ஈமுக் கோழி என புதுவரவுகள் வந்துக் கொண்டிருக்கின்றன. சென்னை மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து வளர்ப்பு பிராணிகளை வாங்கி செல்கின்றனர்.

காலையில் கூடி நண்பகல் 12 மணிக்குள் கலைந்து போகிற இந்த சந்தையில் நடக்கும் நில மணி நேரங்களிலான வியாபாரம் சில லட்சங்களை தொட்டுவிடுகிறது. அங்கிருக்ந்த பெரியவர் கோபால் நம்மிடம் இந்த பகுதியில் சந்தை வந்து அறுபது வருஷத்துக்கு மேலாகுது. முன்னெல்லாம் பல வகையான குருவி, பறவைகள் வரும் அதப்பார்க்கவே நல்லா இருக்கும். நானும் கொஞ்ச காலத்திற்கு முன்னாடி ஆசையா ஒரு கிளி வளர்த்தேன். கி.கி.கின்னு கத்திக்கிட்டு என்னையே சுத்தி சுத்தி வரும். ஒரு நாள் அதுக்கு என்ன நோய் வந்ததுன்னு தெரியல. ரெண்டு நாளா எதுவும் சாப்பிடாமல் செத்துப் போச்சு.... இப்பவும் என்னோட செல்லக்கிளி என் கண்ணுக்குள்ளேயே இருக்கு என பிளாஷ்பேக் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அடுத்து நாம் இந்த சந்தையில் நரிக்குறவரான பிப்ரவரி. ‘சாமி நான், பிப்ரவரி மாசம் பிறந்தேனா... அதனால எனக்கு அந்த பேரை வச்சுட்டாங்க..’ என தன் பெயர் காரணம் கூறியவர், நாங்க மணலி பகுதியில் இருக்கிறோம்ங்க, குடியிருக்க வீடு இல்லீங்க, காட்டுக்கு போயி வேட்டையாடக் கூடாதுன்னு பாரஸ்ட் காரங்க தொந்தரவு பண்றாங்க. முன்பெல்லாம் நெறையா குருவிங்க வரும். ஆனால் இப்போ அது மாதிரி கெடையாது. எங்களையும் பாரஸ்ட்காரங்க காட்டுக்கு விடுறதில்லை.

இப்போ நாங்க கவட்டை, பாசிமணி, பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் நெஞ்சுதான் பொழப்பு நடத்துறோம். எங்களுக்கு தெரிஞ்சது காட்டுத் தொழில்தான். அதையும் விட்டுட்டு வந்து கஷ்டப்படுகிறோம். அரசு எங்களுக்கு மாற்றுத் தொழிலை நெஞ்சு தந்தா பரவாயில்லை என தனது ஆதங்கத்தை கொட்டினார். இந்த தொழில் செய்பவர்களுக்கு போலீஸ் செய்யுற கொடுமை சொல்லி மாளாது என நம்மிடம் வாய் திறந்து பேசினார் நமச்சியவாயம்.

இங்கு பல பகுதியிலேயிருந்து கோழி, குருவிகளை கொண்டு வந்து விற்கிறாங்க. எல்லாம் வீட்டுலயே வளர்த்து எடுத்து வர்றாங்க. ஆனா போலீஸ் இதையெல்லாம் விற்க கூடாதுன்னு அள்ளிட்டு போயிடுது. காசு கொடுத்தா கண்டுக்கமாட்டாங்க. வியாபாரம் இல்லாம காசு கொடுக்க முடியாட்ட கேஸ் போடுறாங்க. இதை தடுத்து நிறுத்த சொல்லுங்க என வேண்டுகோள் வைத்தார்.

சிறு குருவிகளையும், பறவைகளையும் காண்பதே அரிதாகி வரும் இக்காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இப்பிராணிகளை பெருகச் செய்வதும், வளர்ப்பு பிராணிகளை வளர்ப்போருக்கு முறையான அனுமதி வழங்குவதும் அரசின் கடமை.

எஸ். முகம்மது ரஃபி

Monday, February 28, 2011

அன்பு செலுத்துவதும் கடவுள்தன்மைதான்!ஷேக்ஸ்பியரின் படைப்புக்களைச் சர்வதேச ரீதியில் தயாரித்து வரும் முக்கிய நான்கு தயாரிப்பாளர்களுள் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ட்டுமிஸ் பிரிச்சேல், நியூ ஆர்லியன்ஸ் லயோலா பல்கலைக்கழகத்தின் நாடகம் மற்றும் நடனத்துறை உதவிப் பேராசிரியர்.  நடனம், நாடகம், குறும்படம், மட்டுமின்றி புகைப்பட தொழில்நுட்பத்தையும் கற்பித்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் உக்ரைன், மலேசியா, நியூயார்க்,  இந்தியா எனப் பல நாடுகளிலும் தனது படைப்பாற்றலை வெளிப் படுத்தி வருகின்றார்.

வானொலி நடிகையாகவும் செயற்பட்டு வரும் இவர் அண்மையில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களையும் திருவான்மியூர் கலாஷேத்திரா நடனத்துறை மாணவர்களையும் இணைத்து நவீன இராமாயணம் என்ற வகையில் "பஞ்சரத்தினா' என்ற குறும்படத்தைத் தயாரித்துள்ளார். திருக்கழுக்குன்றம் அருகே படப்பிடிப்புச் செய்துள்ள இவர், தனது கலைத் திறமையால் மிகவும் பயனுள்ள வகையில் மாணவர்களை நெறிப்படுத்தி உள்ளார். இவரிடம் நாம் கேட்ட சில வினாக்களும்... அவர் சொன்ன பதில்களும்!

Monday, February 14, 2011

Wednesday, February 2, 2011

Sunday, January 16, 2011

I Have a Dream-Martin Luther King

 

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் 'எனக்கொரு கனவுண்டு' எழுச்சி உரை மேலும் வாசிக்க

Martin Luther King, Jr."I Have a Dream" Read More

photo story by jee varshiny