சென்னை அருங்காட்சியகம்

சென்னை அரசு அருங்காட்சியகம் சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தொல்லியல், நாணயவியல்,விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கட்டிடங்கள்
அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள ஆறு தனித்தனியான கட்டிடங்களில் காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன. இவை:
- தலைமைக் கட்டிடம்
- முன் கட்டிடம்
- வெண்கலக் காட்சிக்கூடம்
- சிறுவர் அருங்காட்சியகம்
- தேசிய ஓவியக் காட்சிக்கூடம்
- சமகால ஓவியக் காட்சிக்கூடம்
என்பனவாகும்.
காட்சிக்கூடங்கள்
தலைமைக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சிற்பங்கள், இந்துச் சிற்பங்கள், அமராவதி, சமணம், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், பொது நிலவியல்போன்றவற்றுக்கான 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்தளத்தில் தபால்தலைகள், முறைமைசார் தாவரவியல், பொருளாதாரத் தாவரவியல், பவளப்பாறைகள், முதுகெலும்பிலிகள், மீன்கள், பறவைகள், பொருளாதார நிலவியல், கல்வெட்டியல், சிந்துவெளி நாகரிகம், சிற்பம் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
- முன் கட்டிடத்தில், மானிடவியல் பகுதியில் படைக்கலங்கள், வரலாற்றுக்கு முந்தியகாலம், இனவியல்,இசைக்கருவிகள், நாட்டார் கலைகள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும், தொல்லியல் பகுதியில் தொழில்துறைக் கலைக்கான காட்சிக்கூடமும் அமைந்துள்ளன.

- வெண்கலக் காட்சிக்கூடக் கட்டிடம் தொல்லியல், நாணயவியல், வேதிக் காப்பு ஆகிய பிரிவுகளில் வைணவ, சைவ, பௌத்த, சமண மதங்களைச் சார்ந்த வெண்கலச் சிற்பங்களுக்கான காட்சிக்கூடங்களும், நாணயங்கள், பதக்கங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும் உள்ளன.
- சிறுவர் அருங்காட்சியகத்தில் நாகரிகம், சிறுவர் பகுதி, அறிவியல், போக்குவரத்து, தொழில்நுட்பம், பல்வேறுவகை ஆடைகளுடன் கூடிய பொம்மைகள் ஆகியவற்றுக்கான காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன.

- தேசிய ஓவியக் காட்சிக்கூடக் கட்டிடத்தில், இந்திய மரபு ஓவியப் பிரிவில் இந்தியச் சிற்றோவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், பிற இந்திய மரபு ஓவியங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
- சமகால ஓவியக்காட்சிக்கூடக் கட்டிடம் பிரித்தானிய ஓவியங்களுக்கும், தற்கால ஓவியங்களுக்குமான காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.